மகனுக்காக கருணாநிதியிடம் ராமதாஸ் சரணாகதி-ராமூர்த்தி
சேலம் : வன்னியர் சமுதாயத்துக்காக, ராமதாஸ் எதையும் செய்யவில்லை. பா.ம.க. பாசமுள்ள மகன் கட்சியாக மாறிவிட்டது. ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, ராமதாஸ் கருணாநிதியிடம் சரணடைந்துவிட்டார் என்று வன்னியர் சங்க கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி குற்றம் சாட்டிள்ளார்.
இது குறித்து சேலத்தில், வன்னியர் சங்க கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வன்னியர் சங்க கூட்டமைப்பு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஏழு முறை தமிழக முதல்வருக்கும், உள்துறை, தலைமைச் செயலர்களுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல், காலம் தாழ்த்திவிட்டது.இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பேசிய போது, ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்காக, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்கவிருக்கிறோம்.
நாங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக கேட்டுக் கொண்டால், போட்டியிடுவோம். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு, ஆட்சியில் அமர்த்துவோம்.
எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு தான் முக்கியம். ஒதுக்கீடு பெற்றால் மட்டுமே எங்களின் வருங்கால சந்ததியினர் பயன் பெறுவார்கள்.
வன்னியர் சமுதாயத்துக்காக ராமதாஸ் எதையும் செய்யவில்லை. தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ள ராமதாஸ், ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, பல எம்.எல்.ஏ. சீட்டுக்களை இழக்க உள்ளார்.
பா.ம.க. பாசமுள்ள மகன் கட்சியாக மாறிவிட்டது. ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, ராமதாஸ் கருணாநிதியிடம் சரணடைந்துவிட்டார் என்றார்.
அப்போது வன்னியர் கூட்டமைப்பின் மாநில இளைஞர் சங்க தலைவர் சக்திவேலன், மாநகர அமைப்பாளர் பன்னீர் செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications