ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: ஒருவர் கைது
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவர் கற்பழிதுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் அவரது உடலை சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசியுள்ளனர்.
தோஷா தாக்கர் (24) என்னும் இந்திய பெண் சிட்னி காலேஜ் ஆப் பிசினஸ் அன்ட் ஐடியில் படித்து வந்தார். அவர் ஆஸ்திரேலிய குடியிருப்பு பெற்றவர். கடந்த 9-ம் தேதி திடீர் என்று மாயமானார்.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி காலை கட்டுமானப் பணியாளர்கள் சிலர் மெடோபாங்க் பார்க் அருகில் உள்ள கால்வாயில் ஒரு சூகேஸ் கிடப்பதைப் பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது ஒரு இளம் பெண்ணின் உடல் இருந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தோஷா எப்படி இறந்தார் என்று உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
தோஷா எதற்காக கொல்லப்பட்டார் என்றே தெரியவில்லை என அவரது நண்பர்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து தேனியல் ஸ்டானி-ரெஜினால்ட் 19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதாகியுள்ள ரெஜினால்ட் தோஷா வீட்டிற்கு அருகில் தான் வசித்துள்ளான். நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் பார்ரமாட்டா நீதிமன்றம் முன் விசாரிக்கப்பட்டான். அவனுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
துரதிஷ்டவசமானது-எஸ்எம் கிருஷ்ணா:
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம். இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம். இந்திய தூதரிடம் இருந்து விரைவில் அறிக்கை வரும். இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நீதி கிடைக்க வழிவகை செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications