சுனாமி எதிரொலி.. மாருதி பங்குகள் கிடுகிடு வீழ்ச்சி!!
மும்பை: ஜப்பான் சுனாமி மற்றும் அணு உலை வெடிப்பு காரணமாக, இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதியின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் மாருதியின் பங்குகள் 2.74 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து ரூ 1218.35க்கு விற்பனையாகின.
30 ப்ளூ சிப் பங்குகள் கொண்ட சென்செக்ஸில் இன்று மிக மோசமாக விற்பனையானவை மாருதியின் பங்குகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நிமிடங்களில் இந்த வீழ்ச்சியின் அளவு 3 சதவீதத்தையும் தாண்டியது.
ஜப்பானில் ஏற்பட்ட மோசமான சுனாமி சேதம் மற்றும் அணுஉலை வெடிப்பின் காரணமாக, மாருதியின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்க முன்வந்ததே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகும். மேலும் இந்த பேரழிவு காரணமாக ஜப்பானின் இறக்குமதி முற்றாகக் குறைந்ததும் முக்கிய காரணமாகும்.
பிஎஸ்இயில் ஆட்டோ துறை குறியீட்டெண்ணில் மட்டும் 60 க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன.
பஜாஜ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகளும் சரிவுக்குள்ளாகின.
சென்செக்ஸிலும் இன்று இந்த சரிவு எதிரொலித்தது. பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி 183 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 18144-ல் வர்த்தகம் நடந்தது. நிப்டி குறியீட்டெண் 57 புள்ளிகள் சரிந்து 5,437.35 ஆக இருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications