கிடைத்த பத்தையும் வென்றால் சந்தோஷம்தான்-தா.பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: எங்களுக்குப் பத்து தொகுதிகள்தான் கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த பத்திலும் வென்றால் திருப்திதான் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தா.பாண்டியன்.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 சீட்களை ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இதுகுறித்து தா.பாண்டியன் கூறுகையில்,
மக்கள் ஆதரவு பெற்ற மகத்தான கூட்டணி இது. நாங்கள் போட்டியிடும் 10 தொகுதிகள் மட்டுமல்லாமல் தோழமை கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்வோம்.
ஜனநாயகத்தை மீட்க, சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த, எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டின் பண்பாட்டை மீட்கும் போராட்டமாக எங்கள் பிரசாரம் அமையும்.
எங்களுக்குப் பத்து தொகுதிகள்தான் கிடைத்துள்ளது. இருப்பினும், 10 தொகுதியும் வெற்றியாகும் போது திருப்தி தான் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications