25 நாட்களுக்குள் மொழிபெயர்ப்பைத் திருத்த ஜெ.வுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் 'டைம்'
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களின் தவறான மொழிபெயர்ப்பைத் திருத்த ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் 25 நாள் அவகாசம் அளித்துள்ளது.
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் குவி்தததாக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி கோர்ட்டில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்றும், அதை சரி செய்ய போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பினர் கேட்டுக்கொண்டனர். இதை தனிக்கோர்ட் நிராகரித்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை நேற்று விசாரித்த நீதிபதி கேசவ நாராயணா,
தனிக்கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பில் தவறுகள் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அதன்படி தவறுகள் ஏதாவது இருந்தால் அதை மனுதாரர்கள் (ஜெயலலிதா தரப்பு) திருத்தி 15 நாட்களுக்குள் தனிக்கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.
அதை அடுத்த 10 நாட்களுக்குள் தனிக்கோர்ட் மொழி பெயர்ப்பாளர் சரிபார்க்க வேண்டும். இந்த பணிகளுக்காக மொத்தம் 25 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் 313-வது விதியின் கீழ் தனிக்கோர்ட், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.
வருகிற 26ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கு தனிக் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்ததக்கது. இந்த நிலையில் தற்போது ஜெயலலிதா தரப்புக்கு 25 நாள் அவகாசம் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார், வழக்கின் விசாரணையைத் தவிர்க்க நாடகமாடி வருகிறார் என்று திமுக தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பெங்களூர் தனிக்கோர்ட்டில் வருகிற 26-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications