For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆத்தூரில் பள்ளி மாணவர்கள் மோதலில் ஒருவர் பலி, ஒருவர் கைது

By Siva
Google Oneindia Tamil News

ஆத்தூர்: ஆத்தூர் பள்ளி ஒன்றில் இரு மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது தேவியாக்குறிச்சி. இங்கு தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பளிளியில் சென்னை அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்த வெங்கடேஷ், விருத்தாசலத்தைச் சேர்ந்த மாணவர் முகமது பைரோஸ் ஆகியோரும் படித்து வந்தனர்.

முகமது பைரோஸ் தனது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை வெங்கடேஷ் கிண்டல் செய்துள்ளார். இதன் காரணாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை வகுப்பு முடிந்து மாணவர்கள் வகுப்பறையை வி்டடு வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது மூன்றாவது மாடியில் இருந்து மாணவர்கள் இறங்கி வந்த போது வெங்கடேஷை, முகமது பைரோஸ் காலியாக இருந்த வகுப்பறைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் வெங்கடேஷ் மயக்கம் அடைந்தார்.

வெங்கடேஷின் சத்தம் கேட்டு, சக மாணவர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்து இது குறித்து உடனே வார்டனிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வெங்கடேஷை உடனே ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் வெங்கடேஷ் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக முகமது பைரோஸ் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
2 students namely Venkatesh and Mohamad Fairoz of Tagore matric higher secondary school in Athur fought inside the school premises. In this Fairoz hit Venkatesh in which he died. Police arrested Fairoz and kept him in juvenile school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X