அல்கொய்தா நிபந்தனை: பிரெஞ்சு பணயக்கைதிகளை விடுவிக்க 90 மில்லியன் யூரோ
காவோ: 90 மில்லியன் யூரோ கொடுத்தால் தான் 4 பிரெஞ்சு பணயக் கைதிகளை விடுவிப்போம் என்று அல் கொய்தாவின் வட ஆப்பிரிக்க கிளை தெரிவித்துள்ளது. இவர்கள் 4 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அல் கொய்தாவின் பிடியில் உள்ளனர்.
இந்த நிபந்தனையை ஏற்க பிரான்ஸ் அரசு மறுத்துவிட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சிறைகளில் இருக்கும் அல் கொய்தாவினரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.
வடக்கு மாலியில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,
அவர்கள் பிடியில் இருக்கும் 4 பிரெஞ்சு பணயக்கைதிகளை விடுவிக்க கடத்தல்காரர்கள் குறைந்தது 90 மில்லியன் யூரோ வேண்டும் என்று கேட்கின்றனர். மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு சிறைகளில் இருக்கும் அல் கொய்தாவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர் என்றார்.
கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நைஜரின் யுரேனியச் சுரங்க நகரமான ஆரிலிட்டில் இருந்து கடத்தப்பட்டவர்களில் இந்த 4 பிரான்ஸ் நாட்டவர்களும் அடக்கம். அவர்கள் அனைவரும் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பிணைத்தொகை கொடுத்தபிறகு பிடித்து வைத்திருந்தவர்களில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர். கடத்தப்பட்ட ஆண்கள் அனைவரும் பிரான்ஸின் முன்னணி அணு சக்தி நிறுவனமான அரீவா அல்லது அதன் துணை நிறவனங்களில் பணி புரிந்தவர்கள்.
இந்த கடத்தலுக்கு அல் கொய்தா இஸ்லாமிக் மக்ரெப் அமைப்பின் தலைவர் பொறுப்பேற்றார். அவர் பிரெஞ்சு பணயக்கைதிகள் பத்திரமாக நாடு திருமப வேண்டும் என்றால் உடனே ஆப்கானிஸ்தானில் இருந்து பிரெஞ்சு படையை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி அன்று இந்த அமைப்பு பணயக் கைதிகள் பற்றி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனிடம் நேரடியாக பேசுமாறு கூறியது. அடுத்தவர்கள் கூறும் வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரீஸ் தெரிவித்தது.
நாங்கள் நீண்ட மற்றும் சிக்கல்கள் நிறைந்த பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கிறோம். ஆனால் இதில் நம்பிக்கை உண்டு என்று பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு நெருக்கமான மாலியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
ப்ரூஷெல்ஸில் நடந்த கூட்டத்தின்போது பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் பிணைத் தொகை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த அடிப்படையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றார்.
அல் கொய்தாவின் வட ஆப்பிரிக்க கிளை அல்ஜீரியா, மொரிஷானியா, மாலி மற்றும் நைஜரில் மேற்கத்தியர்களை தாக்குவது, கடத்துவது போன்ற வேலைகளைச் செய்து வருகிறது.
பிரெஞ்சு பணயக்கைதிகள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று தான் அதீத நம்பிக்கை கொண்டுள்ளதாக அரீவா குழுமத்தின்தலைவர் கடந்த 4-ம் தேதி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications