மூன்று சக்கர வண்டிகள் வழங்கிய திமுக வேட்பாளர் சேகர்பாபு மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
சென்னை: பொதுமக்களுக்கு மூன்று சக்கர வண்டிகள் வழங்கிய திமுக வேட்பாளர் பி.கே.சேகர் பாபு மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ரூ.15 லட்சம் பறிமுதல்:
சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை மீறல்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கென்று ஒவ்வொரு தொகுதிக்கும் துணை கலெக்டர் தலைமையில் பறக்கும் படைகள், காவல் துறை அதிகாரி மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் மற்றும் வீடியோ பதிவுகள் செய்யப்படுகின்றன. இந்த 16 பறக்கும் படைகளுடன் கூடுதலாக முக்கிய இடங்களை கண்காணிக்க 7 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
அண்ணாநகரில் நடந்த வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் இருந்த ரூ. 15 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு, உடனடியாக வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சேகர்பாபு மீது வழக்கு:
நேற்று முன்தினம் பறக்கும் படை வண்ணாரப்பேட்டையில் ஆய்வு நடத்தியபோது திமுக வேட்பாளர் பி.கே. சேகர் பாபு பொதுமக்களுக்கு 2 மூன்று சக்கர மீன்பாடி வண்டிகள் கொடுத்துள்ளது கண்டிபிடிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த 2 மீன்பாடி வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறக்கும் படைகள் சென்னையில் உள்ள தொகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேர்தல் விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார் தெரிவிக்க விரும்புவோர் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 2010, 1800 425 2011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications