சட்டசபை தேர்தல்: நெல்லை, தூத்துக்குடி அதிமுகவில் பெண்களுக்கு வாய்ப்பில்லை
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிமுக போட்டியிடும் 11 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவந்ல்லூர், சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம் ஆகிய 6 தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.
நெல்லை, தூத்துக்குடியில் ஏற்கனவே 15 தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிமுக அறிவித்தபோது ராதாபுரம் தொகுதி வேட்பாளராக சசிகலா புஷ்பா, தூத்துக்குடி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் ஆகியோ்ர் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தென்காசி, நான்குநேரி, ராதாபுரம், ஓட்டபிடாரம் ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக வேட்பாளர்களின் திருத்திய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
ராதாபுரம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா வாய்ப்பை இழந்துள்ளார். அதே நேரத்தில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் ஜெனிபர் சந்திரன் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, ஆலங்குளம், சங்கரன்கோவில், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications