இலவசங்கள் பெயரில் மக்களை ஏமாற்றும் கட்சிகள்: தேவநாதன் யாதவ்

சென்னை தி. நகரைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரின் மகன் தேவநாதன் யாதவ். இவர் யாதவ மகாசபை தேசிய தலைவர். நான்குநேரி தொகுதியில் தனது அமைப்பின் சார்பாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு தேவநாதன் யாதவ் கூறுகையில்,
அரசியல் கட்சிகள் சாதி அமைப்புகளை கண்டு கொள்ளாத நிலையில் எங்கள் பலத்தை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் தான் நாங்கள் தேர்தலில் போடடியிடுகிறோம்.
இலவசங்கள் என்ற பெயரில் இரு கட்சிகளும் மக்களை முட்டாளாக ஆக்கி வருகிறது. இதனை மக்கள் நம்ப வேண்டாம். எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் வேலை வாய்ப்பு, தொழிற்சாலைகள், நல்ல நிர்வாகம், விலைவாசி உயர்வை கட்டுபடுத்துதல், சீரான சட்டம் ஒழுங்கு போன்ற பணிகளை நாங்கள் மேற்கொள்வோம்.
மக்கள் இடையே இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இந்த தேர்தலில் யாதவ மக்கள் உள்பட பல்வேறு சாதியினர் அரசியல் கட்சியினருக்கு மாற்றாக எங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய அரசியல் கட்சிகளை போல் நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனத்தில் வந்து தேவநாதன் யாதவ் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடீஸ்வர யாதவ்!
அசையும் சொத்துகளை பொறுத்தவரை யாதவ் பெயரில் ரூ. 1.40 கோடி, மனைவி பெயரில் ரூ. 19 லட்சம், குடும்பத்தினர் பெயரில் ரூ. 14.75 கோடி,
அசையா சொத்துகளை பொறுத்தவரை யாதவ் பெயரில் ரூ. 2.50 கோடி, மனைவி பெயரில் ரூ. 80 லட்சம், குடும்பத்தினர் பெயரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications