சுனாமி நிதியை கூட பயன்படுத்தாதவர் ஜெயலலிதா: கனிமொழி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

Kanimozhi
சிதம்பரம்: தனது ஆட்சி காலத்தில் சுனாமி நிதியை கூட ஒழுங்காக பயன்படுத்தாதவர் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி ஆட்சியில் ரூ. 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடலூர் மாவட்த்தில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

துரை.ரவிக்குமார் நமது கூட்டணி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். சட்டசபையில் தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கூறி பதிவு செய்துள்ளார்.

இவர் முயற்சியில் கடலூர், நாகை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் முட்டம்-மணல்மேடு இடையே பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வீராணம் ஏரி தூர்வாரப்பட்டு அந்த மண்ணை கொண்டு கொள்ளிடக்கரையை பலப்படுத்தும் பணியும் நடக்கிறது.

இதனால் ஏரியின் கொள்ளளவு உயர்த்தப்பட்டு அதிகளவு நீர் தேக்கலாம். ரூ.115 கோடி செலவில் கொள்ளிடக்கரையை அகலப்படுத்தி, பலப்படுத்தி கரையை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே துரை.ரவிக்குமாருக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+