கருணாநிதி குடும்பத்தால் பலிகடாவாக்கப்பட்ட 'தலித்' ராசா, 'இஸ்லாமிய' பாட்சா-ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
ஊட்டி: கருணாநிதி குடும்பத்தின் ஊழல் வெறியால் தலித் வகுப்பைச் சேர்ந்த ராசாவும், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சாதிக் பாட்சாவும் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ராசா தலித் என்பதால் அவரை குறி வைக்கின்றனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியபோதெல்லாம் அதைக் கடுமையாக விமர்சித்தனர் ஜெயலலிதாவும், அவரைச் சேர்ந்தவர்களும். ஆனால் இன்று ஜெயலலிதாவை தலித் ராசாவை பலிகடாவாக்கி விட்டனர் என்று பேசியது அவரது லேட்டஸ்ட் பல்டியாக அமைந்துள்ளது.

ஊட்டியில் இன்று பிற்பகல் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். வழக்கம் போல எழுதி வைத்ததைப் படித்தார் ஜெயலலிதா. இருப்பினும் இன்று புதிதாக சிலவற்றை எழுதி வைத்து அவர் படித்தார்.

ஜெயலலிதா பேச்சு:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு கருணாநிதி குடும்பமே முழுப் பொறுப்பாகும். இக்குடும்பத்தின் ஊழல் வெறிக்கு பலிகடாவானது தலித் ராசா, பலியானது இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சாதிக் பாட்சா.

இப்போது மீண்டும் கொள்ளையடிப்பதற்காக கருணாநிதி குடும்பத்தினர் ஓட்டுக் கேட்டு வருகின்றனர். அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் என்பார்கள். மக்களாகிய நீங்கள்தான் தெய்வங்கள். நீங்கள்தான் கருணாநிதி குடும்பத்தினரை தண்டிக்கக்கூடியவர்கள். அந்த சக்தி உங்களுக்குத்தான் உள்ளது.

தமிழக மக்களே நல்ல தீர்ப்பு தாருங்கள். தமிழ்நாட்டைக் காக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

கருணாநிதியை இம்முறையும் விட்டு விட்டால் தமிழ்நாட்டையே தனது குடும்ப சொத்தாக்கிக் கொண்டு விடுவார். அவர்களை நீங்கள்தான் விரட்டியடிக்க வேண்டும்.

அன்று உண்ணாவிரத நாடகமாடி தமிழினத்தை இலங்கையில் அழிக்க உறுதுணையாக இருந்தார்.

செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் அவர் நடத்திய மாநாட்டில் கருணாநிதி குடும்பத்தினரே கெளரவிக்கப்பட்டனர்.

நில அபகரிப்பு, ஆள் கடத்தல் புகாருக்குள்ளான என்.கே.கே.பி. ராஜதா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. மதுரையில் தினகரன் அலுவலகத்தில் 3 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் யாராவது தண்டிக்கப்பட்டார்களா. ஹார்லிக்ஸ் பாட்டில் திருட்டு வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் மின்வெட்டுதான் அமலில் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. கருணாநிதிக்கு தனது குடும்பம் மட்டும் வளமுடன் இருந்தால் போதும்.

பத்திரிக்கைத் துறை, திரைப்படத்துறையை இன்று கருணாநிதி குடும்பம் கபளீகரம் செய்து விட்டது.

கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல் இது. தமிழ்நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தருகிற தேர்தல் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+