கொடுங்கையூர் சி.எஸ்.ஐ. ஆலயத்தை இடிப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்
சென்னை: கொடுங்கையூரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவி்த்து வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மூன்றாவது பிளாக்கில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் சிறு குடிசையாக இருந்த இந்த ஆலயம் கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் கட்டடமாக ஆனது.
இந்த ஆலயம் இருக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இதையடுத்து அந்த இடத்தை பழைய விலைக்கு வாங்க சி.எஸ்.ஐ. திருச்சபை முடிவு செய்தது. அதற்கான முன் பணத்தை கொடுக்கவும் தயாராக இருந்தது.
இந் நிலையில் இடத்தை காலி செய்து ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த ஆலயம் இடிக்கப்படும் அபாயம் உள்ளது என்று சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள் அஞ்சுகின்றனர். நேற்று காலையில் மின் இணைப்பைத் துண்டிக்க அதிகாரிகள் வந்தனர்.
இதையறிந்த கொடுங்கையூர் எம்.ஆர். நகர், மூலக்கடை, கண்ணதாசன் நகர், ஆர்.வி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு முன் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஐ.சி.ஐ. பேராயர் சிஷ்வா பிரகாஷ், பேராயர் சாம்சன், வடசென்னை போதகர்கள் ஐக்கியம் மற்றும் சபை கமிட்டி உறுப்பினர்கள் ஆலயத்தின் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
பேராயர்கள் சிஷ்வா பிரகாஷ், சாம்சன் ஆகியோர் கூறுகையில்,
இந்த ஆலயத்தில் 75 சதவீதம் தலித் மக்களும், 25 சதவீதம் மற்ற இனத்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
நியாயமான விலைக்கு இடத்தை கொடுக்குமாறும், அதற்காக முன் பணமாக ரூ. 25 லட்சத்தை கொடுத்து இடத்தை வாங்க தயாராக உள்ளோம். ஆனால் அதை ஏற்காமல் ஆலயத்தை இடிப்பதிலேயே குறியாக உள்ளனர். இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஆலயத்தை இடிக்காமல் தடுக்க வேண்டும். இங்கு தொடர்ந்து வழிபாடு நடத்த உதவ வேண்டும் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications