ஆத்தூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை கட்டிவைத்து அடித்த பாமகவினர்!!
ஆத்தூர்: ஆத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளரை பாமகவினர் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் அருகே வீரகனூரைச் சேர்ந்தவர் சுந்தர் (42). விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில துணை செயலாளராக உள்ளார்.
கடந்த வாரம் வீரகனூர் பேருந்து நிலையத்தில் வைத்து விடுதலை சிறுத்தைகளுக்கும், பாமகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த பிரச்சனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் சுந்தர் தான் காரணம் என்று பாமகவினர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில், தனது பைக்கில் ஆத்தூரில் இருந்து வீரகனூர் நோக்கி சென்ற சுந்தரை பாமகவினர் வழிமறித்து அவரை தாக்கினர். பின்பு சுந்தரை தொடவூர் மாரியம்மன் கோவிலில் கட்டி வைத்து, அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்த கெங்கவல்லி எஸ்.ஐ. அன்பரசன் சுந்தரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications