தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் அனுப்பினால் தொடர் போராட்டம்: பாஜக
வேலூர்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் அனுப்பினால் தொடர் போராட்டம் வெடிக்கும் என்று பாஜக மாநில துணை தலைவர் ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வேலூரில் பாஜக மாநில துணை தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு, இலங்கை அரசை கண்டிக்கவில்லை.
ராஜபக்சேவை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஈடுபடக் கூடாது. இலங்கைப் படுகொலையை ஆதரிக்கும் காங்கிரஸ் கூட்டணியை திமுக உதறித் தள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 3,700 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கேபிள் மூலம் மின்சார வினியோகம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவ்வாறு இலங்கைக்கு மின்சாரம் கொடுத்தால், நாட்டு மக்களை ஒன்று திரட்டி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்











Click it and Unblock the Notifications