கொடநாடு ஓய்வை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் ஜெ.

சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற்றது. இதில் தீவிரப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. தேர்தலுக்குப் பின்னர் 19ம் தேதி அவர் கொடநாடு சென்றார். அங்கு ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா நேற்று சென்னை திரும்பினார்.
தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அவர் சென்னை திரும்பியுள்ளதாக தெரிகிறது. நேற்று பிற்பகலில் சென்னை வந்த ஜெயலலிதாவுக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தடபுடலாக வரவேற்கப்பட்ட ஜெயலலிதாவை செய்தியாளர்கள் அணுகி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்து கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த தெயலலிதா, இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. மே 14ம் தேதிக்கு கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை கோர்ட் தள்ளி வைத்துள்ளது எனவே நானும் அதுவரை எனது பதிலை தள்ளி வைக்கிறேன்.
கனிமொழியைக் காப்பாற்றுவதற்காக ராசாவை திமுக கை கழுவுவதாக கூறப்படுவது குறித்து நான் இப்போது பதிலளிக்க இயலாது. கோர்ட்டில் வழக்கு உள்ளதால் அதுகுறித்துக் கூற விரும்பவில்லை என்றார்.
தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு மே 13ம் தேதி அனைவருக்கும் அது தெரிய வரும் என்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் செய்துள்ள விரிவான ஏற்பாடுகள் தனக்கு திருப்தியும், மகிழ்ச்சியும் தருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
அமைச்சர்கள் பட்டியல் தயார்?
இதற்கிடையே, ஜெயலலிதா தனது அமைச்சர்கள் பட்டியலைத் தயாரித்து முடித்து விட்டதாக ஒரு செய்தி கூறுகிறது. அதில் கொளத்தூர் தொகுதியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் சைதை துரைசாமி, கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், பல புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்க ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications