மெரீனாவில் மாயமான சிறுமி அரசு மருத்துவமனை அருகே மீட்பு
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் காணாமல் போன 5 வயது சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்டாள். தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியை மருத்துவமனை போலீசார் மீட்டனர்.
ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். அவரது மனைவி ஹசீனா. அவர்களுக்கு தம்மன்னா, ரிகாத் என்னும் 5 வயது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
சையது நூர் அகமது கடந்த 11-ம் தேதி தனது குடும்பத்துடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார். அங்கே பஞ்சு மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமி திடீர் என்று மாயமானாள்.
மகளைக் காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கடற்கரை முழுவதும் தேடினர். ஆனாலும் பலனில்லை. இதையடுத்து
அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசாக் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனாலும் சிறுமி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சிறுமியின் படத்துடன் கூடிய போஸ்டர்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவிலும், திருப்பதி கோயில் அருகிலும் ஒட்டப்பட்டது. துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டது. அந்த போஸ்டரில் இருந்த எண்ணைப் பார்த்து ராஜவேலு என்னும் வாலிபர் தம்மன்னாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் சிறுமியை திருப்பதி கோயில் அருகே ஒரு பெண்ணுடன் பார்த்ததாகத் தெரிவித்தார்.
நூர் முகமது இது பற்றி போலீசில் கூறினார். உடனே தனிப்படை போலீசார் திருப்பதிக்கு விரைந்தனர். இந்நிலையில் சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு மருத்துவமனை அருகே தனியாக நின்று கொண்டிருந்தாள். அவளை அரசு மருத்துவமனை போலீசார் மீட்டனர். திருப்பதியில் பார்த்ததாக கூறப்பட்ட சிறுமி சென்னை அரசு மருத்துவமனை அருகே எப்படி வந்தாள் என்பது தம்மன்னாவிடம் விசாரித்த பிறகு தான் தெரிய வரும்.
இதற்கிடையே மெரினா கடற்கரையில் கடந்த 15-ம் தேதி ஐஸ்வர்யா(11) என்ற மன வளர்ச்சி குன்றிய சிறுமி காணாமல் போனாள். கலங்கரை விளக்கம் அருகே அழுது கொண்டிருந்த சிறுமியை மீனவர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். பிறகு போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications