கொளுத்தும் கோடை: சென்னையில் ஏசி விற்பனை 30 சதவீதம் உயர்வு!

இதில் ஏகத்துக்கும் பாதிக்கப்பட்டிருப்பது மின்விசிறிகள் விற்பனைதான்.
கோடைக்காலம் தொடங்கி விட்டாலே ஃபேன், ஏ.சி., கூலர் போன்ற பொருள்களின் விற்பனை அதிரிகப்பது வாடிக்கைதான். ஆனால் இந்த ஆண்டின் கோடையின் தொடக்கத்தில் இருந்தே ஏ.சி. விற்பனை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார்கள் விற்பனையாளர்கள்.
பொதுவாகவே ஸ்பிளிட் ஏசி வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
குறைந்தபட்சம் ரூ 19 ஆயிரம் முதல் ரூ 40 ஆயிரம் வரை போகிறது ஸ்பிளிட் ஏசி விலை. விண்டோ ஏசி கொஞ்சம் விலை குறைவு. ரூ 11 ஆயிரம் தொடங்கி 25 ஆயிரம் வரை, தரம் மற்றும் பிராண்டைப் பொறுத்து மாறுகிறது. அதிக விலை என்பதால் தவணை முறையில்தான் பெரும்பாலும் வாங்குகிறார்கள் மக்கள்.
ஏசியோடு ஒப்பிடுகையில் ஏர் கூலர்கள் அந்த அளவு விற்பனையாவதில்லை. ரூ 3000 முதல் 10 ஆயிரம் வரை இதன் விலை தரம் மற்றும் கொள்ளளவுக்கேற்ப மாறுபடுகிறது.
ஏசி வாங்க முடியாத நிலையில் இருப்பவர்களின் அடுத்த சாய்ஸ் கூலர்களாக உள்ளன. ஆனால் பேன்களை வாங்குவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை மக்கள். இதற்கு முக்கிய காரணம், பெரும்பாலான வீடுகளில் பேன் கட்டாயம் இருக்கும். ஏசி அல்லது கூலர்தான் புதிதாக தேவைப்படும் சாதனமாக உள்ளது.
சென்னையில் முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 30 சதவீதம் வரை ஏசி விற்பனை உயர்ந்துள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
இதன் விளைவு மின்சார நுகர்வும் பெரிய அளவுக்கு உயர்ந்துள்ளது. மின்வெட்டுக்கான மிக முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications