அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா மனைவியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது
சென்னை: அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையாவின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியைத் தாக்கிவிட்டு 10 பவுன் செயினைப் பறித்துச் சென்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
அதிமுக துறைமுகம் தொகுதி எம்எல்ஏவான எழுத்தாளர் பழ.கருப்பையா
சென்னை கோபாலபுரம் பெசன்ட் ரோட்டில் வசித்து வருகிறார்.
இன்று காலை 9.30 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது கருப்பையாவின் மனைவி கலைவாணி (58) மட்டும் வீட்டில் இருந்தார்.
அவர், கருப்பையா இருக்கிறாரா என்று விசாரித்துள்ளார். அவர் வீட்டில் இல்லை என்று கூறிய கலைவாணி, நீங்கள் யார் என்று விசாரித்தார். ஆனால், பதிலேதும் சொல்லாத அந்த நபர் திடீரென தனது ஹெல்மட்டால் அவரை தலையில் அடித்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடினான்.
கலைவாணி சுதாரித்து சத்தம் போடுவதற்கு அந்த நபர் தப்பி ஓடி விட்டான்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை போலீசார் பழ.கருப்பையா வீட்டுக்கு விரைந்து விசாரணை நடத்தினர். செயினுடன் தப்பிச் சென்ற கொள்ளையன் அவசரத்தில் தனது செல்போனை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டான்.
அதை வைத்து அவனை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதையடுத்து மாலையில் அவன் கைது செய்யப்பட்டான். அவனது பெயர் முபாரக் என்று தெரியவந்துள்ளது.
ஏட்டு மனைவியிடம் நகை பறிப்பு-வாலிபர் பிடிபட்டார்:
இந் நிலையில் அண்ணா சமாதி அருகே பஸ்சில் ஏட்டு மனைவியிடம் செயின் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொத்தவால் சாவடியை சேர்ந்த போலீஸ் ஏட்டு மனைவி சுஜாதா. இவர் மெரினா கடற்கரையில் இருந்து வீடு திரும்புவதற்காக அண்ணா சமாதி அருகே உள்ள பஸ் நிலையத்தில் நின்ற மாநகர பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது பஸ்சின் உள்ளே இருந்த வாலிபர் ஒருவர் சுஜாதாவின் கழுத்தில் இருந்த செயினை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.
அவர் கூச்ச லிட்டதும் அருகில் இருந்த மற்ற பயணிகள் மற்றும் பொது மக்கள் அந்த வாலிபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவனை அண்ணா சதுக்கம் போலீசில் ஒப்ப டைத்தனர். விசாரணையில் அவன் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஜோசப் (25) என்பது தெரியவந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications