எரிமலை சாம்பல் பிரச்சினை: ஐரோப்பிய விமான போக்குவரத்து சீரடைந்தது!
ஸ்டாக்ஹோம்: எரிமலை சாம்பலால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கியதால், ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
இங்கிலாந்து அருகே ஐஸ்லாந்து நாட்டில் உள்ள கிரீம்ஸ்வோடின் என்ற எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்தது. இதன் காரணமாக அதன் உச்சியில் இருந்து நெருப்பும், சாம்பலும் வெளியேறியது. எரிமலையின் சாம்பல் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் வானத்தில் பரவியது.
எரிமலை சாம்பல் விமானங்களின் என்ஜினில் புகுந்தால் அவை செயல் இழக்கும் ஆபத்து உள்ளதால், நேற்று முன்தினம் இங்கிலாந்திலும், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகளிலும் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜெர்மனியில் எதிர்ப்பு
ஜெர்மனியில் பெர்லின், ஹம்பெர்க், பெர்மன் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் நேற்று பல மணி நேரம் மூடப்பட்டன. ஜெர்மனியில் நேற்று சுமார் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையம் பெர்லின் நகரத்துக்கு வரும் மற்றும் அங்கு இருந்து கிளம்பும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு ஜெர்மனியில் எதிர்ப்பு கிளம்பியது. இது அளவுக்கு அதிகமான எதிர்விளைவு என்றும், அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
எரிமலை சாம்பல் வடக்கு நோக்கி நகர தொடங்கியதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் விமானங்களை ரத்து செய்தன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனில் இருந்து ஹம்பர்க் செல்லும் ஒரு விமானத்தையும், ஹம்பர்க்கில் இருந்து லண்டன் வரும் 2 விமானங்களையும் ரத்து செய்தது.
சாம்பல் வெளியேறுவது நின்றது
இதற்கிடையே, கிரீம்ஸ்வோடின் எரிமலையின் சீற்றம் தணிந்தது. அதில் இருந்து சாம்பல் வெளியேறுவது நின்று போனது. இதனால் வானம் தெளிவானதை தொடர்ந்து, இங்கிலாந்து விமானம் ஒன்று சோதனை ஓட்டமாக பாதிக்கப்பட்ட பகுதியில் செலுத்தப்பட்டது. அது எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் திரும்பியது.
இதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி சீரடைந்தது. ஜெர்மனியில் பெர்லின், ஹம்பர்க், பான் ஆகிய நகரங்களில் மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு விமான போக்குவரத்து தொடங்கியது.
ஏர் இந்தியா விமானங்கள்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து மும்பை வரும் ஏர் இந்தியா விமானம் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டது. இதேபோல், டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் 2 விமானங்களும் புறப்பட்டு சென்றன.
கடந்த ஆண்டு இதுபோல் எரிமலை வெடித்ததால் ஒரு வாரத்துக்கு மேல் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் உலக விமானப்போக்குவரத்து தொழிலுக்கு அப்போது ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications