டீசல் விலை ரூ. 4 ஆக உயர வாய்ப்பு-லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் எச்சரிக்கை

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மூன்று பொருட்களின் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த மறுநாளே கூடுவதாக இருந்தது. ஆனால், திடீரென அக்கூட்டம் ஜுன் 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஜூன் 9ம் தேதி கூடும் இக்கூட்டத்தில் டீசல், காஸ் விலை உயர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், காஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 20 முதல் 25 வரையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டீசல் விலை உயர்த்தப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வை எதிர்த்து இந்தியா முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications