விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் குதிக்கும் சிபிஐ
திருவாரூர்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து அடுத்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில்,
மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வால் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகிறார்கள். இதனை கண்டித்து வருகிற ஜுன் மாதம் முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். திறமையற்ற ஆட்சியாளர்களால் விலைவாசி நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
பணவீக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது என்று மத்திய அமைச்சர் கூறுவது, அரசை பயமுறுத்துகிறாரா? அல்லது மக்களை பயமுறுத்துகிறாரா? என்று தெரியவில்லை.
சட்டமன்றத்தேர்தலில், தமிழக மக்கள் கவனத்துடன் நல்லமுடிவு எடுத்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. அரசு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட வேண்டும்.
சமச்சீர்கல்வியை முற்றிலும் கைவிடக்கூடாது. எந்த திட்டத்திலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். பல அறிஞர்கள் ஆய்வு செய்து, அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என உலகநாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்தியா இதுவரை வாய் திறக்கவில்லை என்றார் தா.பாண்டியன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications