போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க பெங்களூர் தமிழ்ச் சங்கம் தீர்மானம்
ஓசூர்: போர்க் குற்றம் புரிந்துள்ள இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று பெங்களூர் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பாக முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இராசு. மாறன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் இலங்கை அரசு போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த குற்றங்களுக்காக தண்டிக்கும் வகையில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.
இதில் பெங்களூர் தமிழ்ச் சங்க தலைவர் மு.மீனாட்சி சுந்தரம், செயலாளர் கோ. தாமேதரன், ஐடிஐ தமிழ் மன்ற தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், கூட்டத்தின் இறுதியாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை பன்னாட்டு, நீதிமன்றம் விசாரித்து தக்க நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வந்துள்ளது. இந்த மீறல்களை தண்டிக்கும் வகையில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும்.
தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை தமிழக முதல்வர் உடனே எடுக்க வேண்டும்.
போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு, இந்திய அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவக் கூடாது போன்று பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications