முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் உறவினர் விபீஷ்ணன் விபத்தில் பலி
பெரம்பலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் உறவினரும், பெரம்பலூர் மாவட்ட திமுக பிரதிநிதியுமான விபீஷ்ணன் விழுப்புரம் அருகே கார் விபத்தில் பலியானார்.
பெரம்பலூர் வடக்கு மருதவிரோடு பகுதியை சேர்ந்தவர் விபீஷ்ணன் (50). இவர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சந்திரா (40). இவர்களுடைய மகன் அருண், மகள் மதிவதனம் (23).
மகன் அருணின் திருமணம் வரும் 20 ம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்துக்காக சென்னையில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க விபீஷ்ணன் தனது குடும்பத்தினருடன் சென்றார்.
பின்னர், விபீஷ்ணன், அவரது மனைவி சந்திரா, மகள் மதிவதனம், உறவினர் மாலினி ஆகியோர் பெரம்பலூரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் திரும்பினர். காரை
டிரைவர் முகமது ஆசிப் ஓட்டினார்.கார் விழுப்புரத்தை அடுத்த பிடாகம் பகுதியில் வந்த போது நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் விபீஷ்ணன் மற்றும் கார் டிரைவர் முகமது ஆசிப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
இந்த விபத்தில், படுகாயமடைந்த சந்திரா, மதிவதனம், மாலினி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் ஓடோடிவந்து காப்பாற்றி விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மதிவதனம் பரிதாபமாக இறந்தார். சந்திரா, மாலினி ஆகியோருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications