வடக்கு மண்டல ஐஜியாக சைலேந்திர பாபு நியமனம்-35 அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் ஐஜிக்கள், டிஐஜிக்கள் உள்ளிட்ட 35 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல ஐஜியாக கோவை கமிஷனர் சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்டுள்ள அறிக்கை
டோக்ரா சிறைத்துறை ஐஜி
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி எஸ்.கே. டோக்ரா, சென்னை சிறைத்துறை ஐ.ஜி.,யாக ஏடிஜிபி அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி.,யாக ஆஷிஷ் பெங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவுப் பொருட்கள் சிஐடி பிரிவின் ஏடிஜிபியாக இருந்த டி. ராதாகிருஷ்ணன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கண்காணிப்பு பிரிவுக்கான ஏஜிபியாக இருந்த கே. ராதாகிருஷ்ணன், உணவுப் பொருட்கள் சிஐடி பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த கே.பி. மகேந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஐ.ஜி.,யாக இருந்த கன்ஹு சரண் மஹலி, திருச்சி மத்திய மண்டலத்துக்கான ஐ.ஜி.,யாக நியமி்க்கப்பட்டுள்ளார்.
மதுரை தெற்கு மண்டல ஐஜி ஆபாஷ் குமார்
சென்னையில், உளவுத்துறை (உள் பாதுகாப்பு) ஐ.ஜி.,யாக இருந்த அபாஷ் குமார், மதுரை தெற்கு மண்டலத்துக்கான ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை தெற்கு மண்டலத்துக்கான ஐ.ஜி.,யாக இருந்த எம்.என். மஞ்சுநாதா, சென்னை சிபிசிஐடி ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை நகர ஆணையராக இருந்த சைலேந்திர பாபு, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்த ஆர்.சி. குடவ்லா, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.,யாக இருந்த கே. வன்னிய பெருமாள், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை கமிஷனர் அமரேஷ் பூஜாரி
சென்னை போலீஸ் பயிற்சி பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த அமரேஷ் பூஜாரி, கோவை நகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு (2) ஐ.ஜி.,யாக அலெக்சாண்டர் மோகன் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு போலீஸ் அகாடெமியின் ஐ.ஜி.,யாக பிரதாத் வி. பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சரக டிஐஜி.,யாக ஆர். திருஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் டிஐஜி சந்தீப் மிட்டல்
மதுரைச் சரக டிஐஜி.,யாக இருந்த சந்தீப் மிட்டல், ராமநாதபுரம் சரக டிஐஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சரக டிஐஜி.,யாக இருந்த ஏ.ஜி. மவுரியா, மாநில போக்குவரத்து கழகத்தின் முதன்மை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களைப் போல மொத்தம் 35 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications