தயாநிதி மாறன் தொடர்ந்து பதவியில் நீடிப்பதை ஏற்கவே முடியாது-பாஜக
சென்னை: ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக குவிந்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் பதவியில் தயாநிதி மாறன் தொடர்ந்து நீடிப்பதை ஏற்கவே முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் முரளீதர் ராவ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தொலைத் தொடர்பு ஊழலில் தயாநிதி மாறன் பெயர் அடிபடுகிறது. அவருக்கு எதிராக பல ஆதாரங்களை ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரன் சிபிஐயிடம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ஊழல் புகார்கள் வெளிவரும் நிலையில் அவர் தொடர்ந்து மத்திய அமைச்சராக பதவியில் நீடித்து வருவது ஏற்கத்தக்கதல்ல. அதை பொறுத்துக் கொள்ள முடியாது.
தயாநிதி மாறன் உடனடியாக பதவியிலிருந்து விலகவேண்டும். அல்லது பிரதமர் அவரை நீக்க வேண்டும்.
ஸ்விஸ் வங்கிகளில் பெருமளவில் பணத்தைக் குவித்து வைத்துள்ளவர்களின் விவரத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெளனம் சாதித்து வருகிறது.
ராம்தேவ் கருப்புப் பணத்திற்கு எதிராக பல வருடமாக போராடி வருகிறார். அப்போதெல்லாம் அவரது போராட்டம் குறித்து காங்கிரஸுக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால் இப்போது அவரது போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதைத் தொடர்ந்து அரசியல் சாயம் பூசி தப்பிக்கப் பார்க்கிறது. இது கண்டனத்துக்குரியது என்றார் ராவ்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications