தி்முக திட்டமெல்லாம் ஒரு குடும்பத்துக்கு நன்மை பயக்கும் திட்டங்களே-பழ. கருப்பையா
சென்னை: திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களெல்லாம் ஒரு குடும்பத்துக்கு மட்டும் நன்மை பயக்கும் திட்டங்கள்தான். அவையெல்லாம் நாட்டுக்கான திட்டங்கள் அல்ல என்பதால்தான் புதிய அரசு அதை ரத்து செய்துள்ளது என்று அதிமுக உறுப்பினர் பழ. கருப்பையா கூறியுள்ளார்.
சட்டசபையில் நடந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பழ. கருப்பையா பேசியாவது:
தனியாருக்குச் சொந்தமான கேபிள் டி.வி. நிறுவனத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இது கடந்த ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த சட்டம்தான். அதை கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், தன்னுடைய குடும்ப நிறுவனம் என்பதால் அந்தச் சட்டத்தை ரத்து செய்தார்.
தனது குடும்ப நன்மைக்காக கருணாநிதி சட்டங்களை உருவாக்கியபோதும், ரத்து செய்தபோதும் தோழமைக் கட்சிகள் அதற்குத் துணையாக இருந்தன. இப்போது, ஜெயலலிதாவின் அரசு கேபிள் டி.வி.யை நாட்டுடைமையாக்கி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்க இருக்கிறது.
கருணாநிதியின் குடும்பத்தினர் ஒரு கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.200 வசூல் செய்தார்கள். இதற்காகவே ஒன்றரை கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை போவோர், வருவோருக்கெல்லாம் விரட்டி, விரட்டி கொடுத்தார்கள். இதற்கு அரசுப் பணம் பல ஆயிரம் கோடி விரயம் செய்யப்பட்டது.
ஒரு கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.200 என்றால், ஒன்றரை கோடி கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.300 கோடி வருவாய் கிடைக்கும். அப்படியானால், ஒரு ஆண்டுக்கு ரூ.3,600 கோடி கிடைக்கும்.
நல்லத் திட்டங்களையெல்லாம் கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்களே, இது நாட்டுக்கு நல்ல திட்டமா, அல்லது அவர்களின் குடும்பத்துக்கு நல்லத் திட்டமா?
எந்த ஒரு ஆட்சியும் தன் ஆட்சிக் காலத்துக்கு மட்டுமே திட்டமிடும். ஆனால், கடந்த தி.மு.க. அரசு, தன்னுடைய ஆட்சியில் எஞ்சியிருந்த ஓராண்டு காலத்துக்கு வீடு வழங்கும் திட்டத்தைப் போடாமல், அடுத்த ஆட்சிக் காலத்தையும் சேர்த்து 6 ஆண்டுகளுக்கு 21 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்பதாக விளம்பரம் செய்தனர்.
ஓர் அரசாங்கம் அந்த ஆண்டில் கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு மட்டுமே அட்டைகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. அரசு 19 லட்சம் அட்டைகள் வழங்கியது.
அந்த அட்டைகளில் "த' (த என்பது தகுதி உடையவர்கள்) என்ற எழுத்து சில ஆயிரம் அட்டைகளிலும், "நி.த.' (நிபந்தனை தகுதி உடையவர்கள்) என்ற எழுத்து பல லட்சம் அட்டைகளிலும் பொறித்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
"த' அரசு நிலங்களில் வசிப்பவர்கள். "நி.த.' தனியார் நிலங்களிலும், கோயில் நிலங்களிலும் வசிப்பவர்கள். தடையின்மைச் சான்றிதழை "நி.த.' அட்டையைப் பெற்றுள்ளவர்கள் அவர்களாகவே பெற்றுவர வேண்டும்.
இது ஒரு காலத்திலும் நடைபெறாது. எந்தக் கோயிலும், தனியாரும் அவர்களுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கமாட்டார்கள். ஆனால், அவர்களை ஏமாற்றும் பொருட்டு "நி.த.' என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இப்படி மக்களை மோசடியாக நம்ப வைக்கின்ற வேலையை ஒரு அரசே செய்யுமானால், அந்த அரசின் திட்டம் எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள்! இத்தகைய மோசடி திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கைவிடுவது நியாயமா, நியாயமில்லையா?
ஆனால், இந்த அரசு மக்களைக் கடனாளியாக்காமல், அரசுப் பொறுப்பேற்று ரூ.1.8 லட்சம் செலவில் 300 சதுரஅடி அளவில் பசுமை வீடுகளைக் கட்டித்தர இருக்கிறது. இது வரவேற்கத்தக்கதா, இல்லையா? என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications