கடலூர் அருகே ஆம்னி பஸ் குளத்தில் கவிழ்ந்து 20 பேர் காயம்
கடலூர்: கடலூர் அருகே ஆம்னி பஸ் ஒன்று மரத்தில் மோதி குளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த 20 பேரும் காயமடைந்தனர்.
சமீபத்தில் சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்குப் புறப்பட்டுச் சென்ற கேபிஎன் ஆம்னி பஸ், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கி பஸ்சில் இருந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்னொரு ஆம்னி பஸ் விபத்து கடலூர் அருகே நடந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் என்ற இடத்தில் பஸ் வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, பின்னர் அருகில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து பஸ்சில் இருந்த அனைவரும் அலறித் துடித்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பஸ்ஸுக்குள் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications