Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. இனி உங்க காட்டுல பண மழை கொட்டும்
Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக ஏற்றம் பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
முன்னேற்றம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அரசுத் துறையில் அனுகூலம் ஏற்படும். அரசு வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தடைகள் தவிடு பொடியாகும். கணவன், மனைவி இருவரும் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது.
கவனம்
மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆண்கள் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்தத்தில் பரவும் நோய்களில் மிகுந்த கவனம் தேவை. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக, பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய குறைபாடுகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
பணவரவு
காசு பணங்கள் சேரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நகை வாங்கும் அமைப்பு உள்ளது. மனதில் ஒருவிதமான சஞ்சலம், கோபம், டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும். கழுத்து, எழும்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. வேலையில் அற்புதமான ஏற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் முக்கிய செய்தி குழந்தைகள் மூலமாக நடக்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.
வழிபாடு
சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். எண்ணெய் குளியல் போடுவது நல்லது. மோர் சாதம், தயிர் சாதம் சாப்பிடுவது உகந்தது. சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் ஏற்றம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications