கோவை ரோட்டில்.. நெருப்பு பறக்க பறந்த சிறார்கள்! பெற்றோர்களுக்கு மறக்க முடியாத தண்டனை கொடுத்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி சாலையில் பைக்கில், நெருப்பு பறக்க அதிவேகமாக சிறார்கள் பயணித்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது. இப்படி இருக்கையில், சிறார்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

கோவை-பொள்ளாச்சி சாலையில் கெட்டிமல்லன் புதூர் முதல் கோவை செல்லும் பகுதியில் சிறார்கள் சிலர் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கியதாக புகார்கள் வந்திருந்தன.

Coimbatore

நெருப்பு பறக்க பறந்த சிறார்கள்

சுமார் 11 சிறார்கள், நள்ளிரவு 11.30 மணிக்கு அதிவேகமாக பைக்குகளை இயக்கியிருக்கின்றனர். பைக்கை ஓட்டும்போது பைக்கின் சென்டர் ஸ்டாண்டை ரோட்டில் அழுத்தி பிடித்திருக்கிறார்கள். இதனால், நெருப்பு பொறி பறந்திருக்கிறது. இதை அப்படியே வீடியோவாக எடுத்து.. நாங்கதான் கெத்து என்று இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்திருக்கிறார்கள். வீடியோ பார்த்த பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மட்டுமல்லாது வாகனங்களை இயக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போலீசார் நடவடிக்கை

இதையடுத்து செட்டிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராகவன் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பைக்கை ஓட்டியவர்களை கண்டுபிடித்தனர். விசாரணையில் பைக்கை இயக்கிய அனைவரும் சிறார்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த 5 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பைக்குகளை பறி கொடுத்த பெற்றோர் காவல் நிலையத்தில் வந்து விசாரித்த போதுதான் உண்மை தெரிய வந்திருக்கிறது.

காவல் நிலையம் வந்த பெற்றோர்கள் மீது, சிறார்களிடம் பைக் கொடுத்து இயக்க அனுமதித்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இனி இதுபோன்று தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த போலீசார் பெற்றோர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர்.

சட்டம் என்ன சொல்கிறது?

மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 199A படி, ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறார்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். முதற்கட்டமாக ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். பின்னர் பெற்றோர் அல்லது உண்மையான உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

லைசென்ஸ் கிடைக்காது

எங்களுக்கு தெரியாம பைக்கை எடுத்து சுத்திக்கிட்டு இருக்காங்க.. என்று பெற்றோர்கள் நீதிமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும். அப்படி தப்பித்தாலும்.. சம்பந்தப்பட்ட பைக்கின் ஆர்.சி.புக் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும். மேலும் தவறு செய்த சிறுவர்கள் 25 வயது வரை லைசென்ஸ் வாங்க முடியாது. மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனில், சிறார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+