14ல் பெரியார், வைகை, பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு அணைகள் திறப்பு: ஜெ உத்தரவு
சென்னை: வரும் 14-ம் தேதி பெரியார், வைகை, பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதல்போக பாசனத்திற்காக பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறுந்துவிடுமாறு தேனி மாவட்ட விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் தேனி மாவட்த்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட விவசாய பெருமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று முதல்போக பாசனத்திற்காக வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications