கோவையில் ஜூலை 29ல் கூடுகிறது திமுக பொதுக் குழு?

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா, கனிமொழி ஆகியோரின் கைதுகளைத் தொடர்ந்து திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் பல முறை கூடியது. அதில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்து விலகலாம், வெளியிலிருந்து மட்டும் ஆதரவு தரலாம் என்று என்று திமுக தலைவர் கருணாநிதி முன் வைத்த கோரிக்கையை அக் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் ஏற்கவில்லை. இதையடுத்து மத்திய அரசில் திமுக தொடர்ந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் கோவையில் ஜூலை 29ம் தேதி திமுகவின் பொதுக் குழு கூடவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலல் படுதோல்விக்குப் பிறகு நடைபெற உள்ள முதல் பொதுக்குழுக் கூட்டம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
திமுகவுக்கு வரிசையாக தோல்வியைத் தந்து கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ள அந்தக் கட்சி கோவையில் இக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் திமுக முப்பெரும் விழாவையும் கொங்கு மண்டலத்திலேயே நடத்த கருணாநிதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தால் கவுண்டர்கள் தவிர்த்த பிற சமூகத்தினருக்கு திமுக மீது அதிருப்தி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அதிருப்தியை போக்கும் வகையில் கோவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications