லோக்பால் மசோதா தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
டெல்லி: லோக்பால் மசோதா தொடர்பாக இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் அரசுத் தரப்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு மசோதா மற்றும் அன்னா ஹஸாரே குழுவினரின் வரைவு மசோதா ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இருப்பினும் இன்றைய கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கப் போவதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், இடதுசாரிகள் கூட்டணியும் தெரிவித்துள்ளன.
பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. அரசும் ஏற்க விரும்பவில்லை. அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளும் இதை ஏற்கவில்லை. அதேசமயம், சில முக்கிய கட்சிகள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரதமர் பதவி தவிர சிபிஐயை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும், எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ளும் முறையைக் கண்காணிக்க வேண்டும், நிதி ஒதுக்கீடு தொடர்பான கண்காணிப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இவற்றை ஏற்க அரசு தயங்குகிறது.
இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிவசேனா பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications