13 வயது சிறுனை ராணுவம் சுட்டுக் கொன்றதை ஏற்கவே முடியாது-ஜெயலலிதா கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார் என்பவரின் 13 வயது மகன் தில்ஷன் நேற்று மதியம் 1.30 மணியளவில் கொடிமரச்சாலை ராணுவ வளாகத்தில் அமைந்துள்ள மரத்தில் ஏற முயன்றபோது அங்குள்ள ராணுவ காவலாளி ஒருவர் அந்த சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
அதன் விளைவாக, சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. அதையடுத்து, அந்த சிறுவன் உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த துயர சம்பவத்தை கேள்விபட்டவுடன் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த சிறுவனுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு ஆணையிட்டேன்.
எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் தில்ஷன் மரணம் அடைந்தான் என்ற செய்தி என்னை ஆற்றொணாத்துயரத்தில் ஆழ்த்தியது. மரத்தில் ஏற முயன்ற 13 வயது சிறுவன் தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல என்பதை பாதுகாவலர் எளிதில் தெரிந்து கொண்டிருக்க முடியும். இருப்பினும், அந்த சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனது ஆணையின் பேரில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராணுவ ஜெனரல் கமாண்டிங் அதிகாரிக்கு கடிதம் எழுதி இந்த கொடூரச் செயலை செய்த ராணுவ வீரரை உடனடியாக தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உள்ளார். அந்த ராணுவ வீரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதி செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, உயிரிழப்பு ஏற்பட்டுள்ள இந்த துயரமான சூழ்நிலையில், பொதுமக்கள் அமைதி காத்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சிறுவன் தில்ஷனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
பெற்றோரிடம் நிதியுதவி வழங்கப்பட்டது
இதையடுத்து தில்ஷனின் பெற்றோரிடம் ரூ. 5 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை முதல்வர் உத்தரவின்பேரில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி ஆறுதல் கூறினார்.
ராணுவம் மறுப்பு
இதற்கிடையே, ராணுவ வீரர்கள் யாரும் சிறுவனை சுட்டுக் கொல்லவில்லை என்று நிர்வாகப் பிரிவு பிரிகேடியர் சசி நாயர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க விட மாட்டோம். போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர், ராணுவ போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள வீடுகளிலும், அப்பகுதியிலும் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளோம். இதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில்தான் தவறு செய்தது யார் என்பது தெரிய வரும்.
ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு வீரர்கள் யாரும் அந்த சமயத்தில் இல்லை. எனவே ராணுவ வீரர்கள் சுட்டிருக்க வாய்ப்பில்லை.
தடவியல் அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார்.
தாயாரின் வேதனை
சிறுவன் தில்ஷனின் தாயார் கலைவாணி தனது மகனைப் பறி கொடுத்த வேதனையில் கதறிக் குமுறினார்.
அவர் கூறுகையில்,
எனது கணவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு தற்போது வேலைக்கு போகாமல் உள்ளார். இதனால் எனது 3 குழந்தைகளையும் படிப்பை நிறுத்திவிட்டு கவர் செய்யும் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினேன். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில்தான் குடும்பம் நடக்கிறது.
என் பிள்ளை தில்ஷன் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து வாதாம் காய் பறித்துள்ளான். அவனை அடித்து துரத்தியிருக்கலாம். ஆனால் பாவிகள் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் காக்கையை சுடுவதுபோல் சுட்டு இருக்கிறார்கள்.
நான் வந்து பார்த்தபோது குண்டுபாய்ந்த நிலையில் எனது மகன் காக்கை செத்து தொங்குவதுபோல மதில்சுவரில் தொங்கினான். எனது மகனை சுட்ட பாவியை கைது செய்து கடும் தண்டனை வழங்கவேண்டும். எனது மகன் தில்ஷன் 6-வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். குடும்ப கஷ்டத்தால்தான் அவனை படிக்கவைக்க முடியவில்லை என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications