எதிர்கட்சிகளை குறைகூற ரங்கசாமிக்கு தகுதியில்லை: அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன்
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு அக்கட்சி தலைவரிடமே தஞ்சம் அடைந்துள்ள ரங்கசாமிக்கு எதிர்க்கட்சிகளை குறை கூற தகுதி இல்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் நாங்கள் சபையில் இல்லாதபோது பேசிய முதல்வர் ரங்கசாமி உண்மைக்கு புறம்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கடமையாற்ற எதிர்க்கட்சிகள் சபைக்கு வந்திருக்க வேண்டும் என்றும், மக்கள் எண்ணத்தை நிறைவேற்றும் அரசு இது என்றும் கூறியுள்ளார்.
மக்கள் விரோத காங்கிரஸ் அரசை அகற்றி விட்டு அதிமுக கூட்டணி அரசு அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பொது மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தனர்.
ஆனால் வாக்களித்த மக்களுக்கும், அதிமுகவிற்கும் பெரும் துரோகத்தை செய்து விட்டு ரங்கசாமி ஆட்சி அமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு அக்கட்சி தலைவரிடமே தஞ்சம் அடைந்துள்ளார் ரங்கசாமி. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை குறை கூற முதல்வர் ரங்கசாமிக்கு தகுதி இல்லை.
புதுவையில் 7 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து நேர்மையான முறையில் 50 சதவீத ஒதுக்கீடான 450 இடங்களை பெற வேண்டும்.
மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு பெறுவதில் மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது. இதை சட்டசபையில் நிரூபிக்க தயாராக உள்ளோம்.
ஜனநாயக கடமையாற்ற வேண்டுமானால் சட்டசபையைக் கூட்டினால் தானே பேச முடியும். சட்டசபையில் ஆளும் கட்சியை சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது. முதல்வர் ரங்கசாமி இதற்கு தயாரா என அன்பழகன் சவால்விட்டுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications