மீன் பிடிக்கச் சென்று மாயமான 3 மீனவர்கள் குடும்பத்திற்கு ஜெயலலிதா நிதியுதவி
சென்னை: சென்னை திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளைச் சேர்ந்த, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 3 மீனவர்கள், ஒரு வருடத்திற்கு மேலாகியும் திரும்பாததால் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா இன்று குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் குப்பம், எண்ணூர் பகுதிகளைச் சேர்ந்த கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன 3 மீனவர்களின் பெற்றோர்களிடம் மீனவர் நல வாரியத்தின் மூலம் நிவாரணத் தொகையாக ரூ. 1 லட்சம் வீதம், ரூ. 3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ரவி , பன்னீர்செல்வம் மற்றும் எண்ணூரைச் சேர்ந்த சுதாகரன் ஆகிய 3 மீனவர்களும் கடந்த 17.5.2010 அன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று, கரை திரும்பவில்லை.
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, காணாமல் போன மீனவ குடும்பங்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, அந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மீனவர் நல வாரியத்தின் மூலம் நிவாரணத் தொகை வழங்கிட ஆணையிட்டார்.
அதன்படி, காணாமல் போன மூன்று மீனவர்களின் பெற்றோர்களிடம் நிவாரணத் தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையினை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications