பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷங்கள் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானவை: ஜெயேந்திரர்

நிருபர்களிடம் பேசிய அவர், நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காக அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தது.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டவை தான். எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானவை. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும் என்றார்.
பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்தக் கோவிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சமீபத்தில் திறக்கப்பட்டன. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், தங்க-வைர நகைகள், வைரம், வைடூரியம் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதைத் திறக்க நிபுணர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இந்த அறையில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் தான் இந்தக் கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications