சிறுவன் தில்ஷனைக் கொன்றது நான் தான்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வாக்குமூலம்

சென்னை இராணுவக் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனை இராணுவ அதிகாரி யாராவது தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று தில்ஷனின் உறவினர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிய வந்தது.
இந்த வழக்கை சிபி-சிஐடி விசாரித்து வருகிறது. ஏற்கனவே மர்ம காரில் வந்த லெப்டினன்ட் கர்னல் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தான் யாரையும் சுட்டுக் கொல்லவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதன் பிறகும் சில அதிகாரிகளிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கந்தசுவாமி ராம்ராஜ்(58) என்பவர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி தான் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். விசாரணையில் தில்ஷனைக் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று சிபி-சிஐடி ஏடிஜிபி சேகர் தெரிவித்தார். அவர் நேற்று மதுரைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் தான் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்ஷனை சுட பயன்படுத்தப்பட்ட யுஎஸ் ஸ்பிரிங்பீல்டு நீள் துப்பாக்கி கூவம் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக கொலையாளி யார் என்று தெரியாமல் இருந்த பிரச்சனை தீர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications