கொல்கத்தா போலி நிறுவனங்கள் பெயரில் கலைஞர் டி.வி.க்கு வந்த ரூ 214 கோடி!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கலைஞர் டி.வி. பங்குதாரரான கனிமொழி எம்.பி., அந்த டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சினியுக் மீடியா நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கும் இடையே இந்த பணம் கைமாறி இருக்கிறது.
2 ஜி ஆதாயத்துக்காக கிடைத்த லஞ்சப் பணம்
ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் உரிமையாளரான சாகித் பல்வாவின் மற்றொரு நிறுவனமான டி.பி. குழுமம் 'லஞ்சமாக' இந்த பணத்தை கலைஞர் டிவிக்கு வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது.
சினியுக் நிறுவனம் மூலமாக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணை தொடங்கியதும், வணிக பரிமாற்றத்துக்காக கடனாக இந்த பணத்தை பெற்றதுபோல் காட்டி கலைஞர் டி.வி. திருப்பிச் செலுத்தத் தொடங்கியதாகவும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
கொல்கத்தா போலி நிறுவனங்கள்
இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் 19 நிறுவனங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளன. வருமான வரித்துறை அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள இந்த நிறுவனங்களில் இருந்த பணம் சபையர் மீடியா மற்றும் கட்டமைப்பு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர் அந்த நிறுவனம் சார்பில் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.83 கோடி ரூபாய் மாற்றப்பட்டு இருக்கிறது.
அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனம், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட 'கடன்' தொகையான 230.31 கோடியை கரீம் மொரானியின் சினியுக் நிறுவனத்துக்கு திருப்பிச் செலுத்துவதற்காக 69.61 கோடி கடனாக வழங்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வருமான வரித்துறை விசாரணையில், கொல்கத்தாவில் செயல்படுவதாக கூறப்படும் அந்த 19 நிறுவனங்களும் போலியானவை என்று தெரியவந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications