நிலமோசடி-வள்ளியூர் காவல் நிலையத்தில் குவியும்-ஒரே நாளில் 116 பேர் புகார்
வள்ளியூர்: வள்ளியூரில் நில மோசடி தொடர்பாக நேற்று ஒரே நாளில் 116 பேர் தனிப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதில் முதல் கட்டமாக 4 பேரின் மனுவுக்கு வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நில மோசடி அதிகரித்து வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள் மாவட்டத்தில் நிலுவையில் உள்ளன. நில மோசடி தொடர்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு முகாம் காவல்துறை உட்கோட்டத்தில் நடத்தப்படுகிறது.
நேற்று வள்ளியூர் காவல் நிலையத்தில் நடந்த சிறப்பு முகாமை கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நில மோசடி தொடர்பாக விசாரிக்கும் தனிப்பிரிவு டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜூ, செந்தாமரைகண்ணன் உள்பட தனிப்பிரிவு போலீசார் நில மோசடி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் மனுககளை பெற்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள நில மோசடி புகார்களை அந்தந்த காவல் நிலையத்தில் விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். வள்ளியூர், ராதாபுரம், திசையன்விளை, உவரி, பணகுடி, கூடன்குளம், ராதாபுரம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்களும், ஆண்களும் காலையில் இருந்தே வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க நீண்டவரிசையில் நின்றிருந்தனர். மொத்தம் 116 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications