ராசா உள்பட 3 பேரிடம் 3 மணி நேரம் சிபிஐ விசாரணை

ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ரிலையன்ஸ் அடாக் குழும நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு கோர்ட்டில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை பரிசீலித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஷைனி, விசாரணைக்கு அனுமதி அளித்தார். மூன்று பேரிடமும் தலா ஒரு மணி நேரம் விசாரணை நடத்தலாம் என நீதிபதி அனுமதி கொடுத்தார்.
இதையடுத்து 2 மணிக்கு விசாரணை தொடங்கி நடந்தது. இதில் ராசா உள்ளிட்ட மூன்று பேரிடமும் பல்வேறு விளக்கங்களை சிபிஐ கோரியதாக தெரிகிறது.
வழக்கமாக தஙக்ளது காவலில் எடுத்து யாரையும் விசாரிப்பது சிபிஐயின் வழக்கம். இருப்பினும் ராசா உள்ளிட்டோரை, சிபிஐ கோர்ட் அமைந்துள்ள பாட்டியாலா கோர்ட் வளாகத்திலேயே வைத்து விசாரித்தது சிபிஐ.
இதற்கிடையே, ஏற்கனவே 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ள சிபிஐ தற்போது 3வது குற்றப்பத்திரிக்கையைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. இன்று நடந்த விசாரணையின் அடிப்படையில் சில முக்கியத் தகவல்களை தனது 3வது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications