சாட்சிகள் உள்ள ஊர்களுக்கும் அமெரிக்காவுக்கும் போகக் கூடாது- நித்தியானந்தாவுக்குத் தடை

பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடாதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அங்கு நடிகை ரஞ்சிதாவுடன் அவர் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கோரி அவர் ராம்நகர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றார் நித்தியானந்தா.
இந்த நிலையில், இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சாட்சிகளை நித்தியானந்தா மிரட்டுவதாகவும், கலைக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில் இன்று அதன் மீது தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், நித்தியானந்தாவின் ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. மாறாக, சாட்சிகளைக் கலைக்க நித்தியானந்தா முயற்சிக்கக் கூடாது. சாட்சிகள் வசிக்கும் ஊர்களுக்குப் போகக் கூடாது. அமெரிக்காவுக்கு அனுமதியில்லாமல் செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கோர்ட் பிறப்பித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications