ரூ 2 கோடி சீன செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!
சென்னை: சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ 2 கோடி மதிப்புள்ள செல்போன்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள சரக்கு பிரிவில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது சென்னையில் உள்ள 4 நிறுவனங்களுக்கு, சீனாவில் இருந்து பொருட்கள் வந்ததை கண்டுபிடித்தனர். பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அவற்றில் ஏராளமான புதிய செல்போன்கள் இருந்தன.
பார்சல்களில் மத்திய அரசின் அனுமதி பெற்ற முத்திரைகள் எதுவும் இல்லை. சட்டவிரோதமாக இவை கடத்தி வரப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மூலம் சுங்க தீர்வை மற்றும் விற்பனை வரி மோசடி செய்யப்பட்டு இருக்கிறது. செல்போன்கள் வந்த நிறுவனங்கள் பற்றி விசாரித்த போது அவை போலியானது என தெரியவந்தது.
இதையடுத்து, ரூ.2 கோடி மதிப்புள்ள 12,449 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செல்போன்கள் தவிர, வைரங்கள் கடத்தல் போன்றவை மூலம் இதுவைர ரூ.40 கோடி வரை வரி மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications