ஸ்ரீரங்கம் உள்பட 9 இடங்களில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகள்: ஜெ திறப்பு
சென்னை: 15 நாட்களில் பட்டா வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டே திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் 15 நாட்களில் பட்டா வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த 10-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் முதல்வர் இந்த புதிய திட்டம் குறித்து அறிவித்தார். அறிவித்தபடியே அத்திட்டத்தை துவங்கி வைத்துள்ளார்.
பட்டா மாறுதல் கோரி பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை அவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்களே பெற்றுக் கொள்ளும் வகையில் வருவாய் நிலை ஆணைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திருத்தத்தின்படி இனி கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கட்கிழமை தோறும் முழு நேரம் அலுவலகத்தில் இருந்து பட்டா மாற்றம் குறித்த மனுக்களை பெறுவார்கள். பட்டா மாற்றம் செய்ய மக்கள் படும்பாட்டைக் குறைக்கத் தான் முதல்வர் இந்த புதிய ஏற்பாட்டை செய்துள்ளார்.
ஒருவேளை கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முழு நேரம் அலுவலகத்தில் இருந்து பட்டா மாற்றம் கோரும் மனுக்களை பெறுவார்கள்.
வெள்ளிக்கிழமை தோறும் நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் வருவாய் கணக்குகளில் தேவையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாற்றத்திற்கான உத்தரவுகள் வழங்கப்படும்.
இனி மாநிலம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை பட்டா மாற்றம் செய்யும் நாளாக கடைபிடிக்கப்படும்.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட வருவாய் ஆய்வாளர், குறுவட்ட நில அளவர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோர் பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களின் மீது அறிக்கை சமர்ப்பிக்க காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் கணிணியில் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
உட்பிரிவு செய்யத் தேவையில்லாத இனங்களில் 15 நாட்களுக்குள்ளும், உட்பிரிவு செய்ய வேண்டிய இனங்களில் 30 நாட்களுக்குள்ளும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று வட்டாட்சியர் உறுதி செய்ய வேண்டும்.
இனி பட்டா மாற்றம் செய்ய விரும்பும் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று காத்திருக்க வேண்டாம். அவரவர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் மனுக்களை கொடுத்தால் போதுமானது.
ஸ்ரீரங்கம் உள்பட 9 இடங்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்:
அதே போல ஸ்ரீரங்கம் உள்பட 9 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், உலகத்தரத்திலான உயர் கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உறுதியான உன்னத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் கல்லூரிகளை தொடங்கி கிராமப்புற ஏழை மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்கி ஒளிமயமான வாழ்க்கையை பெற்றிட வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் மாவட்டம்-நெம்மேலி, தூத்துக்குடி மாவட்டம்-நாகலாபுரம், தர்மபுரி மாவட்டம்-அரூர், விழுப்புரம் மாவட்டம்-கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம்-சாத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்- வேதாரண்யம், வேலூர் மாவட்டம்-திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டம்- திருத்துறைப்பூண்டி ஆகிய 9 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
மேற்கண்ட கல்லூரிகளோடு, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய இரண்டு இடங்களிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றை இந்த கல்வியாண்டிலேயே (2011-2012) தொடங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அந்த பகுதியை சேர்ந்த ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் தங்கள் பகுதியிலேயே உயர்கல்வி பெற வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது.
நாகலாபுரத்தில் பல்கலை உறுப்பு கல்லூரி துவக்க விழா
விளாத்திகுளம் தொகுதி நாகலாபுரத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய உறுப்பு கல்லூரியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
விளாத்திகுளம் சட்டசபை தொகுதி நாகலாபுரத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய உறுப்பு கல்லூரி துவக்க விழா நேற்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் கல்லூரியை திறந்து வைத்தார். தொடர்ந்து நாகலாபுரம் கல்லூரி வளாகத்தில் துவக்க விழா நடந்தது. விழாவுக்கு எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கூட்டுக் குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.டி.ஓ. பொன்னின் செல்வன் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக பதிவாளர் மாணிக்கம் வரவேற்றார்.
விழாவில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசுகையில்,
ஏழை, எளிய கிராமப்புற மக்களும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் கிராமப் புறங்களில் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த கல்லூரிக்கு கிராம தன்னிறைவு திட்டம் மூலம் ரூ.35 லட்ச ரூபாய் பங்களிப்பு தொகை, அரசின் 65 லட்சம் ரூபாய் பங்கு தொகையுடன் மொத்தம் ரூ.1 கோடி நீதி ஒதுக்கீட்டில் வசதிகள் மேம்படுத்தப்படும்.
நாகலாபுரம் உறுப்பு கல்லூரியில் ராமசந்திரன் முதல்வராகவும், 8 பேர் பேராசிரியர்களாகவும் உள்ளனர். பி.ஏ. பாடப் பிரிவில் 64 மாணவர்களும், பி.காம் பாடப் பிரிவில் 58 பேரும், பி.எஸ்.சி. , கணிதப் பாடப் பிரிவில் 40 பேரும், பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸில் 48 பேரும் மொத்தம் 209 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
பின்னர் கல்லூரி அமைப்பதறகாக நன்கொடை வழங்கியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications