தாம்பரத்திலிருந்து தென்மாவட்ட ரயில்களை இயக்க கடும் எதிர்ப்பு... போராட்டம் அறிவிப்பு!
சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்குவது என்ற முடிவை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ரயில்வே பாசஞ்சர் உரிமை குழு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ரயில்வே பாசஞ்சர் உரிமைகுழுவின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழில் வர்த்தக தலைவர் வி.வி.எஸ். மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் வி.ஆர். முத்து முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு ரயில்வே பாசஞ்சர் உரிமைகுழுமம் ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வடக்கே செல்லும் 7 ரயில்கள் சென்னை எழும்பூர் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையம் 1977-ல் தொடங்கப்பட்டு 9 நடைமேடைகளுடன் உள்ளது.
இதை விரிவுப்படுத்த முடியாது என்பதால், எழும்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென்மாவட்டங்களுக்கு செல்லும் 16 ரயில்களை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்குவதற்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.
தவறான முடிவு
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென்மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி, சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்ல குறைந்தது 2 மணி நேரம் ஆகிவிடும். மேலும் பயணிகளுக்கு கூடுதல் செலவும், காலவிரயமும் ஏற்படும்.
ராயபுரம் ரயில் நிலையத்தை விரிவாக்கலாம்
எனவே, இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே அனைத்து வசதிகளும் உள்ள ராயபுரம் ரெயில் நிலையத்திற்கு இந்த திட்டத்தை மாற்றினால் எழும்பூரில் இருந்து வழக்கம்போல தென்மாவட்ட ரெயில்கள் புறப்படும்.
தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு மாற்றாமல் ராயபுரம் ரெயில் நிலையத்துக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் காந்தியடிகள் வழியில் அறப்போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும். அதற்காக ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து வருகிறோம்.
ஜெயலலிதாவுக்கு கோரிக்கை
தென்னிந்தியாவில் முதல்முறையாக ராயபுரத்தில்தான் ரயில்நிலையம் அமைக்கப்பட்டது. ராயபுரம் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமாக 72 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே சுமார் 150 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது. இந்த பாலத்தை காரணம் காட்டி, ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரயில்வே நிர்வாகம் மறுக்கிறது. மிகவும் பழமையான பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலத்தை கட்டலாம். அல்லது அந்த இடத்தில் சப்-வே அமைக்கலாம்.
ராயபுரத்தில் புதிய டெர்மினல் அமைத்தால், தாம்பரத்தில் புதிய டெர்மினல் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே இந்த ராயபுரத்தை ஒரு ரயில் முனையமாக்கிட வேண்டுமென ரயில்வே அமைச்சகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதவேண்டும். அப்படி அவர் எழுதினால் இந்த கோரிக்கை நிச்சயம் ஏற்கப்படும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கிறது," என்றார்.
கூட்டத்தில், தொழிலதிபர்கள் ரத்தினவேல், டி.கே.பி. சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடசென்னை மக்கள் உரிமை கூட்டமைப்பும் இதுகுறித்த பிரச்சாரத்தி இறங்கியுள்ளது. நாங்குனேரி எம்எல்ஏ நாராயணன்,
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications