மெட்ரோ வாட்டர் பணிகளால் பிஎஸ்என்எலுக்கு நஷ்டம் 1.96 கோடி!!
சென்னை: புறநகர் பகுதிகளில் நடக்கும் மெட்ரோ வாட்டர் பணிகளால் பிஎஸ்என்எல்லுக்கு ரூ 1.95 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இத்தகவலை பிஎஸ்என்எல்லின் பொதுமேலாளர் (வடக்கு) சி பெரியசாமி தெரிவித்தார்.
சென்னையின் புறநகர்ப் பகுதியான அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் நடக்கும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் பணிகள் காரணமாக, அந்தப் பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் கேபிள்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து சி பெரியசாமி கூறுகையில், "இந்த மெட்ரோ வாட்டர் பணிகளால் ஏராளமான கேபிள்கள் சேதமடைந்துள்ளன. ஜேசிபி எந்திரங்கள் மூலம் அனைத்து கேபிள்களையும் தோண்டிப் போட்டுவிட்டனர். இதனால் தொலைபேசி சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தாலும், அவர்கள் புகாரை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்து விடுகின்றனர்.
இதனால் பிஎஸ்என்எல்லுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தினமும் சண்டையிடும் நிலை. கிட்டத்தட்ட ரூ 1.95 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது," என்றார்.
அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் மட்டும் பிஎஸ்என்எல்லுக்கு 78000 தரைவழி இணைப்புகளும், 36000 பிராட்பேண்ட் இணைப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications