சபரிமலை புல்மேடு விபத்துக்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: கேரள குற்றப்பிரிவு அறிக்கை
திருவனந்தபுரம்: சபரிமலை புல்மேட்டில் 102 பக்தர்கள் பலியான விபத்துக்கு வனத்துறை, போலீசார் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என கேரள குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி மாலை மகரஜோதியை தரிசிப்பதற்காக புல்மேடு வனப்பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தரிசனம் முடிந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் திரும்பிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் பலியாகினர். இது தொடர்பாக விசாரிக்க கேரள குற்றபிரிவுக்கு கேரள அரசு உத்தரவிட்டது.
அதன்படி விசாரணை நடத்திய குற்றபிரிவு போலீசார் தங்களது அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். புல்மேட்டில் நெரிசல் ஏற்படுவதற்கு வனத்துறை, கேரள போலீஸ் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஆகியோரின் அலட்சியமே முக்கிய காரணம். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
குறுகிய இடத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும் பாதுகாப்பு பணியில் குறைந்த போலீசாரே ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் திருவிதாங்கூர் தேவசம்போர்டும் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கவில்லை.
இந்த விபத்துக்கு பின்னணியில் சதி இருப்பதாக தெரியவில்லை என்று அறிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications