நில அபகரிப்பு வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல: இல. கணேசன்
சேலம்: நில அபகரிப்பு வழக்குகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். அதனால் இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறமுடியாது என்று பாஜக தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதீய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
2ஜி ஊழலில் சிக்கித் தவிக்கும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். ஆனால் திமுகவை விட பெரிய ஊழலில் சிக்கித் திண்டாடுவது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் ஆட்சியை அகற்றினால் தான் ஊழலை ஒழிக்க முடியும்.
எனவே, வரும் 2014-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் பாஜகவைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
2ஜி ஊழல் குறித்து பிரதமருக்கும், ப. சிதம்பரத்திற்கும் தெரியும் என்று ஆ. ராசா கூறுகிறார். அது உண்மையாகக் கூட இருக்கலாம்.
ஊழல் வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அது நடக்க வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்கள் குறித்து தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மனதாரப் பாராட்டுகிறது. இந்த நடவடிக்கைகளால் நடுத்தர மக்கள், அதற்கு கீழ் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ஒன்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அன்று என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications