போலி ஆவணம் மூலம் நிலமோசடி- ஆசிரியர், பெண் கவுன்சிலர் கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த வழக்கில், ஆசிரியர், பெண் கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் செல்லையா. இவருக்கு சொந்தமான இருபத்து மூன்றே முக்கால் சென்ட் நிலம் வடக்கு குண்டல் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை மேலக்காட்டு விளையை சேர்ந்த முருகேசன் மற்றும் தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் முருகேசன் ஆகியோர் விலைக்கு கேட்டனர். ஆனால் செல்லையா மறுத்து விட்டார்.
இந்நிலையில் 23.5.11ம் தேதி தனது நிலத்தில் நின்று கொண்டிருந்த செல்லையா, அவரது மகன் கண்ணையாவை முருகேசன் தரப்பினர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்று ஆவணங்களை காட்டினர்.
இதையடுத்து கடந்த 31.5.2011ல் அன்று கண்ணையா எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். உயிருடன் இருக்கும் எனது தந்தை செல்லையா இறந்து வி்ட்டதாக கூறி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரிப்பு செய்ததாக கூறி இருந்தார். இது குறித்த விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார்.
விசாரணையி்ல் செல்லையா இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிப்பு செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மேலக்காட்டுவிளையை சேர்ந்த முருகேசன், அவரது மனைவி கவுன்சிலர் தமிழ்செல்வி, ஆசிரியர் முருகேசன், நாகர்கோவில் புலவர்விளையை சேர்ந்த ரமேஷ், பாஸ்கர் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications