ரூ. 22 கோடியில் ஏரி, கால்வாய்களை புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை: ரூ. 22 கோடி செலவில் வோலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூவம் உப வடிநிலத்தின் கீழ் உள்ள ஏரிகள், கால்வாய்களை புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மாநிலத்தின் பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள பாசனக் கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்து அவைகளை பழைய நிலைக்குக் கொண்டுவர, நீர்வள ஆதார தொகுப்புத் திட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது.
இதன் தொடர் திட்டமாக, உப வடிநில கட்டமைப்பு முறையில் பாசன சேவை மற்றும் வேளாண் உற்பத்தித் திறன் ஆகியவற்றை மேம்படுத்த 'தமிழ்நாடு நீர்வள, நிலவளத் திட்டம்' ரூ. 2 ஆயிரத்து 547 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாக, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூவம் உப வடிநிலத்தின் கீழ் உள்ள முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகள் மற்றும் கால்வாய்களை ரூ.22 கோடியே 40 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கூவம் வடிநிலம், கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நகரப் பகுதி சென்னை மாநகர எல்லைக்குட்பட்டது.
கூவம் வடிநிலத்தில் 80 முறைசார்ந்த மற்றும் முறைசாரா பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் பாசனப் பரப்பு கொண்ட 54 ஏரிகள் மற்றும் அதன் கால்வாய்களை புனரமைத்து நவீனமயமாக்க இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மதகுகளை மறுகட்டமைப்பு செய்தல், சீர்படுத்துதல், சிற்றணைகளை மறுகட்டமைப்பு செய்தல், சீர்படுத்துதல், ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்துதல், நீர்வழங்கும் கால்வாய்களைத் தூர்வாருதல் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டம், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களிலுள்ள 54 முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகளின் கீழ் உள்ள 6,624 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications